Back to Top

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணி

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணி

June 11, 2018  11:15 am

Bookmark and Share
வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணி ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று (11) காலை இப் பேரணி நடைபெற்றது.

யாழ். பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி பிரதான வீதி ஊடாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தெற்கு மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கோரி, மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

(யாழ். நிருபர் பிரதீபன்)