Back to Top

வேகப்பந்து வீச்சாளருக்கு ஒன்றரை மாத ஓய்வு

வேகப்பந்து வீச்சாளருக்கு ஒன்றரை மாத ஓய்வு

June 11, 2018  01:23 pm

Bookmark and Share
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் எண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, எண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்.

‘சவாலான இந்திய தொடருக்கு எண்டர்சன் முழு உடல் தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார்.