Back to Top

பகிடிவதை தொடராது - பல்கலைக்கழக மருத்தவ பீடம் மீண்டும் திறக்கப்படும்

பகிடிவதை தொடராது - பல்கலைக்கழக மருத்தவ பீடம் மீண்டும் திறக்கப்படும்

June 12, 2018  09:20 am

Bookmark and Share
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த வாக்குறுதியை அடுத்து நாளை (13) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மருத்துவ பீடம் மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவ பீட மாணவர்களுக்கும் மருத்துவ பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் பகிடிவதை இனி மேலும் தொடராது என்று மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியை பரிசீலனை செய்த கிழக்குப் பல்கலைக்கழக மூதவியல் பீடம், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி இறுதி ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் தொடர்ந்து ஏனைய வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் கிழக்கு பல்கலைக்கழக மூதவியல் பீடாதிபதி வைத்தியர் ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்.

(அம்பாறை நிருபர் சரவணன்)