Back to Top

சரத் குமார குணரத்ன உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஜூலை 24ம் திகதி

சரத் குமார குணரத்ன உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஜூலை 24ம் திகதி

June 12, 2018  01:27 pm

Bookmark and Share
முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் பேகோன் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.

ஒரு சந்தேகநபருக்கு 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவான சரீரப்பிணை என்ற அடிப்படையில் 06 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 10 இலட்சத்து 90,000 ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தி நாட்குறிப்பு புத்தகங்கள் அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Most Viewed