Back to Top

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரையும் சந்திக்கமாட்டேன்

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரையும் சந்திக்கமாட்டேன்

June 12, 2018  01:53 pm

Bookmark and Share
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னை ஜூன் 12 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னை சந்திக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது சாதாரண விடயம் என்ற போதிலும், ஊடகங்களில் வெளியானது போன்ற உத்தியோகப்பூர்வ சந்திப்பு எதுவும் இடம்பெற போவதில்லை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Most Viewed