Back to Top

முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

June 12, 2018  04:19 pm

Bookmark and Share
முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவினால் ஜாஎல பிரதேச சபையின் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜாஎல பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் சிலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாஎல பிரதேச செயலக காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மற்றும் ஜாஎல பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.

பிரதேச சபை வளாகத்தில் புதிதாக கட்டப்படுகின்ற கட்டிடம் ஒன்றுக்கு பீலிக்ஸ் பெரேராவின் தந்தையின் பெயரை வைக்காமைக்கு எதிர்ப்பு வௌியிட்டதன் காரணமாகவே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ஜாஎல பிரதேச சபையின் தலைவரை பீலிக்ஸ் பெரேரா அச்சுறுத்தியதாக கூறி பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் அவ்வாறு தான் அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா அத தெரணவிடம் தெரிவித்தார்.

Most Viewed