Back to Top

சபாநாயகர் கோரினால் பதவி விலகத் தயார் - சுஜீவ சேனசிங்க

சபாநாயகர் கோரினால் பதவி விலகத் தயார் - சுஜீவ சேனசிங்க

June 12, 2018  11:10 pm

Bookmark and Share
சபாநாயகர் கோரும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (11) ரி.வி தெரணவில் ஔிபரப்பாகிய 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட விவகாரம் தொடர்பில் 360 அரசியல் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் தனது இராஜினாமா தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

Most Viewed