Back to Top

வீதித் தடுப்பில் மோதி பேருந்து  கவிழ்ந்தில் 17 பேர் பலி

வீதித் தடுப்பில் மோதி பேருந்து கவிழ்ந்தில் 17 பேர் பலி

June 13, 2018  09:21 am

Bookmark and Share
உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தது.

அதிவேகமாக சென்ற அந்த பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதித் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

பேருந்திற்குள் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது.

இதனால் இரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் மற்றும் பொலிஸார் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.