Back to Top

Samsung Electronics ஆசியாவின் மதிப்பு மிக்க முதன்மை தயாரிப்பாக  தொடர்ந்து 7வது வருடமாக தெரிவு

Samsung Electronics ஆசியாவின் மதிப்பு மிக்க முதன்மை தயாரிப்பாக தொடர்ந்து 7வது வருடமாக தெரிவு

June 13, 2018  10:42 am

Bookmark and Share
Samsung Electronics ஹொங்காங்கில் இயங்கி வரும் தகவல் தொடர்பு நிறுவனங்களான ´Campaign Asia Pacific´ மற்றும் Nielsen மேற்கொண்ட ஷயுளயை Asia´s Top 1000 Brands பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக ஆசியாவின் சிறந்த தயாரிப்பாக முதலிடத்தை பிடித்துள்ளது.

Samsung நிறுவனத்தின் தயாரிப்புபோட்டித்தன்மையில் ´social goodness´ என்ற சமுக நன்மை மூலோபாயக் கொள்கை முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. Samsung Electronics 2004 ஆம் ஆண்டுகணக்கெடுப்பில் 17வது இடத்தைப் பிடித்தது.ஆனால் 2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று முறை முதன்மை இடங்களுக்கு உயர்ந்தது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை ஆஸ்திரேலியா, சீனா, ஹொங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட 14 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 15 தொழில் துறைகள் தங்களது நம்பகமான தயாரிப்பாக விருப்பத்துடன் பெயரிட்டுள்ளனர். வயது, பாலினம் மற்றும் மாதாந்திர குடும்ப வருமானம் ஆகியவற்றில் ஒரு சமநிலையான தன்மையை பேணியமை இந்த ஆய்வின் மூலம் ஒரு துல்லியமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளது.

Samsung தொழில்நுட்பத்தின் முன்னோடியாக, பாதைகளை வழிவகுக்கும் வகையில் நுகர்வோர் தேவைகளை கருத்திற் கொண்டு செயற்படுவதோடு ஒருங்கிணைந்த சமுக ஈடுபாட்டை கட்டியெழுப்பி பராமரிப்பதும் அவசியம் என கருதுகின்றது.

ஒவ்வொரு வருடமும் தனது தயாரிப்புகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் மேம்படுத்தல் செயன்முறைகளுக்காக US$14 பில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது. நற்பெயரையும் மதிப்பினையும் தக்கவைத்துக்கொள்ள ஊழியர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் R & D இல் வேலை செய்வதோடு அந்த முடிவுகளை அர்ப்பணிப்புடன் ளுயஅளரபெ இன் தயாரிப்பு முயற்சிகளில் முன்னெடுக்கின்றனர். இதன் பிரதிபலிப்பாக அவர்களின் சமிபத்திய தயாரிப்புக்களைப கீழ்வரும் பட்டியலில் காணலாம்.

இலங்கையில் Samsung SLIM Nielsen People’s விருதுகளில் இந்த ஆண்டின் மதிப்பு மிக்க தயாரிப்பாக People’s Youth Choice விருது சமிபத்தில் வழங்கப்பட்டது.இந்த விருதானது இலங்கையில் இலத்திரனியல் தொழில்துறையை முன்னெடுப்பதற்கான மாபெரும் பிரதிபலிப்பாகும். இன்ஃபினிட்டி டிஸ்பிளே கொண்ட தயாரிப்புக்களை சமிபத்தில் உள்ள10ர் சந்தையில் அறிமுகப்படுத்தி மற்ற தயாரிப்புக்களை விட சிறப்பான தயாரிப்பு என்பதை உணர்த்தியது. இலங்கையில் இளைஞர்களின் தேவைகளை இலக்காகக் கொண்டு மொபைல் டிஜிட்டல் விளம்பரங்களினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. இளைஞர்களின் வாழ்க்கை தரம் மற்றும் பல்வேறு பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக தங்கள் விருப்பத்திற்கேற்ப சிறப்பான படங்களையும் ளநடககைளையும் எடுப்பதற்கேற்ற மேம்படுத்தப்பட்ட தரத்துடன் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி தங்களது தயாரிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. பரவலான பார்வையாளர்களுக்கு மொபைல் சாதனங்கள் மட்டுமல்ல,புநயச ஏசு உடன் பார்வையாளர்களுக்கான மெய்நிகர் யதார்த்த அனுபவத்தை உருவாக்கும் ஒரே ஒரு நிறுவனமாக ளுயஅளரபெ திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Samsung பற்றி...

Samsung Electronics Co.Ltd நிறுவனமானது மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலம் உலகத்தின் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. உலகத்தை ஒன்றிணைக்கும் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் போன்கள், அணியக்கூடிய சாதனங்கள் (உதாரணம் கடிகாரங்கள்) டெப்லெட்ஸ்கள், கமேராக்கள், டிஜிட்டல் உபகரணங்கள், பிரிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள், நெட்வொர்க் அமைப்புகள், (நீக்கப்பட்ட மற்றும்) குறைக் கடத்தி மற்றும் LED கள். Samsung நிறுவனமானது 84 நாடுகளில் 319,000 ஊழியர்களுடன் வருடாந்தம்

US$196 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக பெற்று இயங்கி வருகின்றது.