Back to Top

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 13, 2018  11:15 am

Bookmark and Share
மொனராகல, குருஹெல பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகல பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும், பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் மொனராகல மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை இன்று (13) மொனராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.