Back to Top

ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நவீன வசதிகளுடன் விளையாட்டு பகுதி

ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நவீன வசதிகளுடன் விளையாட்டு பகுதி

June 13, 2018  12:14 pm

Bookmark and Share
ஏப்ரல் மாதம் ஓட்டிசம் விழிப்புணர்வு மாதமாக அமைந்திருந்த நிலையில், சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) மற்றும் இலங்கை சிறுவர் அபிவிருத்தி சம்மேளனம் (SLACD) ஆகியன இணைந்து அம்பாறை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் ஓட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக விசேடமாக அமைந்த சிகிச்சைப் பகுதியுடனான விளையாட்டு பகுதியை நிறுவியுள்ளது.

இந்த புதிய பகுதி அங்குரார்ப்பணத்துடன், அம்பாறை பகுதியில் ஓட்டிசம் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஓட்டிசம் விழிப்புணர்வு நடை பவனி நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்ட வைத்தியசாலையால் SLACD மற்றும் CDBஆகியவற்றிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இந்த நடை பவனி மற்றும் விளையாட்டு பகுதி நிறுவப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நூற்றில் ஒரு குழந்தைக்கு ஓட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு காணப்படுகிறது, CDB இனால் தொடர்ச்சியாக ஓட்டிசம் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், சிறுவர்கள் மத்தியில் ஆரம்ப கட்டத்தில் இந்த நிலை இனங்காணப்படுவதனூடாக அதை நிவர்த்தி செய்யக்கூடிய நிலை பற்றிய விழிப்புணர்வுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த நவீன வசதிகள் படைத்த ஓட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான வெளியக சிகிச்சைப்பகுதியுடனான விளையாட்டு பகுதி, அரச வைத்தியசாலையொன்றில் நிறுவப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதை நிறுவுவதற்கான நிதி உதவிகள் ஓட்டிசம் நம்பிக்கை நிதியத்திலிருந்து வழங்கப்பட்டிருந்தன. இந்த விளையாட்டு பகுதியில், ஊஞ்சல்கள், சறுக்கல் பகுதிகள், trampolines மற்றும் குகைகள் போன்றன காணப்படுவதுடன், சிறுவர்களுக்கு இவை உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றன.

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் உளவியல் வைத்திய ஆலோசகரும், SLACD இன் தலைவருமான வைத்தியர். சுவர்ண விஜேதுங்க இந்த சகல வசதிகளும் படைத்த சிறுவர் விளையாட்டு பகுதி பற்றி குறிப்பிடுகையில், ´இலங்கையில் அதிகளவு ஓட்டிசம் குறைபாடு காணப்படுவதுடன், பெருமளவான சந்தர்ப்பங்களில் இந்நிலை குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. வைத்தியர்கள்; பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் இந்த குறைபாடு தொடர்பில் நன்கு தெளிவுபட்டிருப்பின், இந்த குறைபாட்டை அவர்களால் இலகுவில் இனங்காணக்கூடியதாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இதை குழந்தைகள் பிறந்து 18 மாதங்கள் எனும் ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணக்கூடியதாக இருக்கும். இதற்கான சிகிச்சையை ஆரம்பகட்டத்தில் பெற்றுக் கொள்வதனூடாக குழந்தைக்கு சாதாரண வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும்´ என்றார்.

ஓட்டிசம் விழிப்புணர்வு நடை பவனி, அம்பாறை நகரில் ஆரம்பமாகி அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் நிறைவடைந்தது. இதில் 650க்கும் அதிகமான CDB ஊழியர்கள், SLACD அங்கத்தவர்கள், அம்பாறை மாவட்ட வைத்தியசாலையின் ஊழியர்கள், பொது மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆரம்ப கட்டத்தில் இனங்கண்டு, இந்த நிலை மேலும் மோசமடைவதை தவிர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை இந்த நடை பவனியின் போது வலியுறுத்தியிருந்தனர். இந்த நிகழ்வின் மற்றுமொரு விசேட அம்சமாக, தெரண தொலைக்காட்சி சேவையுடன் பங்காண்மையை ஏற்படுத்தியிருந்ததை குறிப்பிட முடியும். இந்த பங்காண்மையினூடாக பெருமளவான மக்களுக்கு இந்த ஆரம்ப நிலையில் குறைபாட்டை இனங்காண்பதன் முக்கியத்துவம் தொடர்பான செய்தி சென்றடைய பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.

CDB இன் விருது வென்ற, ஓட்டிசம் விழிப்புணர்வு திட்டம், 2015ஆம் ஆண்டு ஆரம்பமாகியிருந்தது. இந்த திட்டத்தினூடாக நாடு முழுவதிலும் ஊடக விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் மூலமான பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிம்புர மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் SLACD இனால் வைத்தியர்கள், மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார மாதுக்கள் மற்றும் இதர சுகாதார துறை அதிகாரிகளுக்காக இரு நிகழ்ச்சிகள் CDB உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியை மேலும் பலர் மத்தியில் சென்றடையச் செய்யும் வகையில் இந்த ஓட்டிசம் குறைபாட்டை கொண்ட சிறுவர்களுக்கான விசேட சிகிச்சை பகுதியுடனான விளையாட்டு பகுதி மற்றும் ஓட்டிசம் விழிப்புணர்வு நடை பவனி போன்றன அமைந்திருந்தன.

நாடு முழுவதிலும் மேலும் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாக ஓட்டிசம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதில் SLACD தொடர்ந்து கவனம் செலுத்தும், ஓட்டிசம் குறைபாடுடையவர்கள் காணப்படும் பகுதிகளில் ஓட்டிசம் சிகிச்சைப்பகுதியுடனான விளையாட்டு பகுதிகளை நிறுவுவதில் CDB கவனம் செலுத்தும். பங்காளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதுடன், மதிப்பீடுகள் மற்றும் இடையீடுகளுக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் சாதனங்கள் போன்றன மேற்கொள்ளப்படும். தேவைப்பாடுகளை கொண்டுள்ள குடும்பங்களை CDB அழைப்பதுடன், இதற்காக 0117 490 000 எனும் தொலைபேசி இலக்கத்தையும் கொண்டுள்ளது.

எம்மைப்பற்றி
இலங்கையின் வங்கிசாரா நிதிசார் நிறுவனங்களில் ஒன்றாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), திகழ்கிறது. நாடளாவிய ரீதியில் 71 கிளைகள் காணப்படுவதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு, இலங்கையில் நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.