Back to Top

வியாபார நிலையத்தில் தீ - 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை

வியாபார நிலையத்தில் தீ - 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை

June 13, 2018  02:42 pm

Bookmark and Share
நெலுவ, படுவங்கல சந்தியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீ விபத்தினால் வியாபார நிலையத்தில் இருந்த சகல பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் கட்டிடமும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) இரவு வியாபார நிலையத்தை மூடிவிட்டு உரிமையாளர் வீட்டிற்கு சென்ற பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் குறித்த வியாபார நிலையத்தில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இருந்ததாகவும் உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Viewed