Back to Top

மன்னார் கடலில் காணாமல்போன மீனவர்களின் சடலங்கள் மீட்பு ?

மன்னார் கடலில் காணாமல்போன மீனவர்களின் சடலங்கள் மீட்பு ?

June 13, 2018  03:45 pm

Bookmark and Share
புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று (13) காலை இவ்வாறு இருவருடைய சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கரை ஒதுங்கிய சடலங்கள் மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன மீனவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் கடலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் பிரதீபன்)