Back to Top

செலான் வங்கி 2018 இன் முதலாம் காலாண்டில் 21%  வளர்ச்சி

செலான் வங்கி 2018 இன் முதலாம் காலாண்டில் 21% வளர்ச்சி

June 13, 2018  04:04 pm

Bookmark and Share
பொருத்தமான சந்தை நிலவரங்கள் குறைவாகவே காணப்பட்ட சூழ்நிலையிலும் செலான் வங்கியானது முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 1,053 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் 2018 ஆம் ஆண்டை உறுதிமிக்க விதத்தில் ஆரம்பித்திருக்கின்றது.

வங்கியின் தேறிய வட்டி எல்லைகள் (NIMs) குறுகலடைந்ததன் விளைவாக பருமனளவில் ஏற்பட்ட சிறப்பான வளர்ச்சியினால், வங்கியின் தேறிய வட்டி வருமானம் 17.21மூ இனால் அதிகரித்தது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் ரூபா 868 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட வங்கியின் தேறிய கட்டண மற்றும் தரகு வருமானத்துடன் ஒப்பிடுகையில் 2018 இன் முதலாம் காலாண்டில் ரூபா 995 மில்லியனாக 14.61% இனால் அதிகரித்திருக்கின்றது. பல்வேறுபட்ட வாடிக்கையாளர் மற்றும் சந்தைப் பிரிவுகளில் கட்டணத்தை பெற்றுத் தரும் வணிகத்தை தம்வசப்படுத்துவற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், அட்டையுடன் (Card) தொடர்புபட்ட வருமானம், வணிக நிதியுடன் தொடர்புடைய கட்டண வருமானம் மற்றும் பிணையங்கள் மற்றும் பணவனுப்பல்களில் இருந்தான கட்டணங்கள் போன்றவற்றில் இவ்வாறான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இந்த முன்முயற்சிகள் விரைவாக முன்னேற்றம் கண்டு வருகின்றமையை கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள், நிதிக் கருவிகளில் இருந்தான ஆதாயங்கள், அந்நியச் செலாவணியின்; மீது கிடைக்கப்பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது 2017 இன் முதலாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூபா 238 மில்லியன் தேறிய ஆதாயத்துடன் ஒப்பிடுகையில், 2018 இன் முதலாம் காலாண்டில் ரூபா 366 மில்லியன் தேறிய ஆதாயத்தை பெற்றுள்ளது.

2017 இன் முதலாம் காலாண்டில் ரூபா 346 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்களுக்கான பெறுமதி மதிப்பிறக்க கட்டணங்களுடன் (Impairment charges) ஒப்பிடுகையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இதன் பெறுமதி ரூபா 542 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. பிரத்தியேக மதிப்பிறக்க கட்டணமாக பதிவு செய்யப்பட்ட ரூபா 380 மில்லியனானது, ஏற்பாட்டு ஒதுக்கீடுகளால் குறித்துரைக்கப்பட்ட கடன் வெளிப்படுத்தல்களை பிரதிபலிப்பதாக காணப்படுகின்றது.

கடந்த வருடத்தின் முதலாம் காலாண்டு காலப்பகுதியில் ரூபா 2,705 மில்லியனாக காணப்பட்ட மொத்தச் செலவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தக் காலாண்டில் ரூபா 2,988 மில்லியனாக 10.46% இனால் அதிகரித்திருக்கின்றது. வங்கியானது ஊழியர்கள் விடயத்திலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு, கிளைகளை தரமேம்படுத்துதல் மற்றும் புதுப்பொலிவூட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்காகவும் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளமை மொத்தச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பின் மூலம் புலனாகின்றது.

முக்கியமான கட்டுப்படுத்தத்தக்க செலவுப் பிரிவுகளிலான செலவை அறிவார்ந்த முறையில் சீரமைப்பதை நோக்கிய முயற்சியில் செலான் வங்கியானது ´லீன்´ முன்னெடுப்புக்கள், வேலைத்தள முறைமைகள் மற்றும் வங்கி முழுவதும் தன்னியக்கமாக்கல் போன்றவற்றை முன்கொண்டு செல்லும் விடயத்தில் தொடர்ச்சியாக கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. அதேநேரத்தில், ஊழியர்களுக்கான நேர்த்தியான வேலைக் கலாச்சாரம் ஒன்றை அனைத்து செயற்பாட்டுப் பிரிவுகளிலும் வலியுறுத்தி போதித்து வருகின்றது.

வட்டி வீதங்கள் அதிகரித்துக் கொண்டிருந்த சூழ்நிலையிலும் வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் தளம் 2018 இன் முதலாம் காலாண்டில் 289,302 மில்லியனாக 3.01% சிறியதொரு அதிகரிப்பை பதிவு செய்திருக்கின்றது. தவணைக்கடன்கள் மற்றும் மேலதிகப் பற்றுக்கள் வங்கியின் கடன்களிலான அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக அமைந்தன.

2018 இன் முதலாவது காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த வைப்புத்தளம் 310,904 மில்லியனாக 1.24% சிறியதொரு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், குறைந்த கிரய வைப்புக்களிலிருந்து (CASA - நடைமுறை மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) தவணை வைப்புக்களின் பக்கமான மாற்றம் ஒன்று அவதானிக்கப்பட்டது. வட்டி வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பும் இதற்கு பகுதியளவில் காரணமாக அமைந்தது.

இதன் பயனாக, வங்கியின் CASA விகிதம் 31.25% ஆக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதுடன், 2017 ஆம் ஆண்டின் இறுதியில் 68.80% ஆக பதிவு செய்யப்பட்டிருந்த மொத்த தவணை வைப்புக்கள் 2018 மார்ச் 31ஆம் திகதி இருந்தபடியான வங்கியின் மொத்த வைப்புத் தளத்தில் 68.75% ஆக அதிகரித்துள்ளது.

முதலாம் காலாண்டு காலப்பகுதியில் வங்கி மேற்கொண்ட சிறப்பான நிதிச் செயற்பாடுகளின் பயனாக வங்கியின் பங்கொன்றிற்கான உழைப்பு (EPS) ரூபா 2.88 ஆக 21.57% இனால் முன்னேற்றம் கண்டுள்ளது. வங்கியின் சராசரி சொத்துக்கள் மீதான வருமானம் (ROAA) 1.52% ஆக பதிவு செய்யப்பட்டதுடன், உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 12.25% ஆக பதிவு செய்யப்பட்டது. 2018 மார்ச் 31ஆம் திகதியில் இருந்தவாறு வங்கியின் பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 94..34 (குழுமம் ரூபா 98.63) ஆக காணப்பட்டது.

மூலதனமாக்கலை தொடர்ந்தும் சிறப்பான முறையில் மேற்கொண்ட நிலையில் செலான் வங்கி காணப்படுவதுடன் வங்கியின் முக்கிய மூலதன நிறைவு விகிதங்கள், ஒழுங்குபடுத்தும் அதிகார தரப்பினரால் குறித்துரைக்கப்பட்ட மட்டத்தை விட உயர்ந்த மட்டத்தில் உள்ளன. அந்தவகையில், மொத்த வுநைச 1 மூலதன விகிதம் 10.37% ஆகவும், மொத்த மூலதன விகிதம் 14.29% ஆகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன.

வங்கியானது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அடிப்படையாக கல்வியை கருதுகின்ற அதேநேரத்தில், தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களில் முன்னுரிமை அளித்துச் செயற்படும் ஒரு விடயப் பரப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அந்த வகையில், ´செலான் பஹசர´ செயற்றிட்டத்தின் கீழ் 2018 இன் முதலாம் காலாண்டு காலப்பகுதியில் 8 பாடசாலை நூலகங்களை வங்கி திறந்து வைத்திருக்கின்றது. இதன் மூலம் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ள மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்திருக்கின்றது. விஷேடமாக, இளம் உள்ளங்களை வளர்த்தெடுப்பதையும் அவர்களுக்கு அறிவூட்டுவதையும் நோக்காகக் கொண்டே வசதி குறைந்த பாடசாலைகளில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு அவர்களை வளப்படுத்துவதால் அவர்களால் நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.

வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுமானவரை மிகச்சிறந்த சேவைகளை எந்நேரத்திலும் வழங்கும் முகமாக தனது வங்கிக்கிளை வலையமைப்பை விஸ்தரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. தற்போது வங்கியின் கிளை வலையமைப்பானது 168 வங்கியியல் நிலையங்களையும் 206 ATM நிலையங்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

மேலும் அதிகளவான வாடிக்கையாளர்களை தமது சேவைகள் சென்றடைவதற்காக வங்கி தனது கிளை வலையமைப்பை மேலும் வளர்ச்சியடையச் செய்வதுடன், போட்டிச்சூழலில் கிடைக்கக் கூடியதாகவுள்ள சாதக நிலையை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு புவியியல் ரீதியாக தனது பிரசன்னத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்;டு வருகின்றது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் தமது சேவையை பெறுவதையும் அவர்களது சௌகரியத்தையும் மேம்படுத்துவதற்காக வாடிக்கையாளர் சேவை மையங்களை விஸ்தரிக்கும் மூலோபாயத்திற்கு அமைவாக தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ´பிட்ச்´ நிறுவனமானது செலான் வங்கியின் தரப்படுத்தலை மீளாய்வு செய்திருந்ததுடன், உறுதியான கண்ணோட்டத்துடன் வங்கிக்கு ´A-lka´ தரப்படுத்தலை உறுதிப்படுத்தியிருக்கின்றது.