Back to Top

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை

June 13, 2018  05:42 pm

Bookmark and Share
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

80 வயதான அப்துல் கயூம், 1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மாலைத்தீவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவராவார்.

தன்னுடைய சகோதரரும், தற்போதைய ஜனாதிபதியுமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பெப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து, மாலைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்துல் கயூமுடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இப்ராகிம் நாசருக்கு பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கயூம் கடந்த 30 ஆண்டுகளாக மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.