Back to Top

வீரப்பனை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி ஓய்வு பெற்றார்

வீரப்பனை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி ஓய்வு பெற்றார்

June 14, 2018  10:22 am

Bookmark and Share
சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி பொலிஸ் சூப்பிரண்டாக 1975 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் பொலிஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் பொலிஸ் சூப்பிரண்டு ஆனார்.

1991 இல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா 2001 இல் மீண்டும் முதலமைச்சரான பிறகு கே.விஜயகுமார் சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் ஆனார்.

அவர் பொலிஸ் கமிஷனராக இருந்த போது சென்னையில் 15 க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் கமிஷனராக இருந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண்டோ படையின் தலைவர் ஆனார். 2004 இல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.

2012 இம் ஆண்டு மத்திய ஆயுதப்படை பொலிஸில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு பணிக்காக மத்திய உள்துறையில் சேர்க்கப்பட்ட அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார் நேற்று அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.