Back to Top

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கான தண்டனை இன்று

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கான தண்டனை இன்று

June 14, 2018  11:38 am

Bookmark and Share
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேருக்கான தண்டனை தீர்ப்பு இன்று (14) வழங்கப்பட உள்ளது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24ம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.