Back to Top

9 அடி உயரமான கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

9 அடி உயரமான கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

June 14, 2018  12:10 pm

Bookmark and Share
தம்புள்ள, கண்டலம பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் பின்னால் நாட்டப்பட்டிருந்த மிகப் பெரிய கஞ்சா செடிகள் இரண்டுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

9 அடி உயரமான கஞ்சா செடிகள் இரண்டே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய கஞ்சா செடிகள் இவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கஞ்சா செடிகள் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் இது தொடர்பில் விசாரணை செய்த போது, தான் குறித்த ஆலையில் சேவை புரிவதாகவும் குறித்த செடி நீண்டகாலமாக அப்பகுதியில் இருந்த போதிலும் அது கஞ்சா செடி என தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கஞ்சா செடிகள் நாட்டபட்டபவையா அல்லது தானாக வளர்ந்தவையா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தம்புள்ள நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.