Back to Top

சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழக்குமா ?

சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழக்குமா ?

June 14, 2018  01:46 pm

Bookmark and Share
உலக பாரம்பரிய தளமாக விளங்கும் சிங்கராஜா வனத்தில் உள்ள காட்டு யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினால், சிங்கராஜா வனம் உலக பாரம்பரிய தளம் எனும் அந்தஸ்த்தை இழந்து விடும் என யுனெஸ்கோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான மின்னஞ்சலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு யுனெஸ்கோ அமைப்பு அனுப்பி வைத்துள்ளதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் கடைசி இடமாக இந்த வனம் காணப்படுகின்ற போதும், அதை பாதுகாக்க வேண்டிய எந்தவொரு தேவையும் அரசாங்க அதிகாரிகளுக்கு இல்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிங்கராஜா வனத்தில் வாழும் விலைமதிப்பு மிக்க குறித்த யானைகள் இரண்டையும் ஹொரவபத்தான யானைகள் சரணாலயத்திற்கு எடுத்துச்செல்ல வனஜீவராசிகள் அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் மக்களுக்கு ஆபத்தான முடிவை சந்திக்கவேண்டி ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்வேறு விதமாக கலந்துரையாடி, நிபுணர்களின் முடிவுகளை பெற்று சரியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கருத்து தெரிவித்த ஆனந்த சாகர தேரர், இந்த விடயம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.