Back to Top

ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எந்தவொரு வேட்பாளருக்கும் பிரச்சினை ஏற்படாது

ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எந்தவொரு வேட்பாளருக்கும் பிரச்சினை ஏற்படாது

June 14, 2018  11:18 pm

Bookmark and Share
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் எந்தவொரு வேட்பாளருக்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்தது போன்று எதிர்காலத்தில் குறிப்பிட்ட இருவரும் ஒன்று சேர இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஊடக சந்திப்பொன்றை கூட நடத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Most Viewed