Back to Top

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக சந்திமாலிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டணை

June 19, 2018  11:02 pm

Bookmark and Share
பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஸ் சந்திமாலிற்கு 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனது போட்டிப்பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாகவும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளில் போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

UPDATE (11.23 pm)

இதேவேளை 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது போட்டியாளர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றிய குற்றத்திற்காக தினேஸ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளர் ஆகியோரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.