Back to Top

25 கிலோ வெடிபொருட்களுடன் இருவர் கைது

25 கிலோ வெடிபொருட்களுடன் இருவர் கைது

July 4, 2018  03:40 pm

Bookmark and Share
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூறைக்குடா பிரதேசத்தில் நேற்று (03) 25 கிலோ நிறையுடைய 170 ஜெலிக்னைட் வெடிபொருட்களுடன் இருவரை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறையினர் தெரிவித்தனர்.

சம்பூர் கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து அவர்களின் ஒத்துழைப்புடன் சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் மூன்று சிலின்டர்கள், ஒரு படகு, ஒரு இன்ஜின், தண்ணீருக்குள் பயன்படுத்தக்கூடிய கையடக்க தொலைபேசி, சாதாரன தொலைபேசி மற்றும் இரண்டு ஜி.பி.ஆர்.எஸ் ஆகியனவும் அவர்களிடம் கைப்பற்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் சம்பூர் மற்றும் ஜமாலியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டதுடன் சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஏற்கனவே சி4 வெடிமருந்து 2 கிலோகிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

(திருகோணமலை நிருபர் கீத்)