Back to Top

வீட்டிற்கு வெளியே உறங்கியவர் காலையில் சடலமாக மீட்பு

வீட்டிற்கு வெளியே உறங்கியவர் காலையில் சடலமாக மீட்பு

July 5, 2018  10:21 am

Bookmark and Share
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று (05) காலை ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி எனும் 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வீட்டார் வெளியே வந்த போதே இவர் சடலமாக காணப்பட்டுள்ளார். அத்துடன் சடலத்திற்கு அருகில் கயிறு போன்றன காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவமானது கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், அது தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)