Back to Top

குளவி கொட்டுக்கு இலக்காகி 06 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்காகி 06 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

July 5, 2018  05:21 pm

Bookmark and Share
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 06 பெண் தொழிலாளர்கள் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (05) பிற்பகல் 02.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

தேயிலை மலை அடிவாரத்தில் இருந்த குளவி கூடு, பெண் தொழிலாளி ஒருவரின் காலில் பட்டமையினால் அதில் இருந்து கலைந்த வந்த குளவிகள் அங்கு தேயிலை கொழுந்து பறித்த பெண்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயங்களுக்கு உள்ளான ஆறு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)