Back to Top

10 கோடி ஏற்றுமதி பயிர்களை நாட்டும் செயற்திட்டம் யாழ்ப்பாணத்தில்

10 கோடி ஏற்றுமதி பயிர்களை நாட்டும் செயற்திட்டம் யாழ்ப்பாணத்தில்

July 7, 2018  08:12 pm

Bookmark and Share
நாடு முழுவதும் 10 கோடி ஏற்றுமதி பயிர்களை நாட்டும் செயற்திட்டமானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி விவசாய திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன், விவசாய திணைக்கள அதிகாரிகள், பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாங் கண்டுகள் வழங்கப்பட்டன.

(யாழ். நிருபர் பிரதீபன்)