Back to Top

கால்வாயில் குடைசாய்ந்த லொறி

கால்வாயில் குடைசாய்ந்த லொறி

July 8, 2018  05:59 pm

Bookmark and Share
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியிலிருந்து நோர்வூட் அயரபி தோட்டத்திற்கு உட்செல்லும் வீதியில் கால்வாய் ஒன்றில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (08) மதியம் 1 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டிட வேலைப்பாட்டுக்கு இரும்பு கம்பிகள் மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களை எற்றி சென்ற லொறி வீதியில் முன்நோக்கி செல்லும் போது லொறியின் தடுப்புக்கட்டை செயழிழந்ததன் காரணமாக பின்நோக்கி சென்று குறித்த கால்வாயில் கவிழ்ந்துள்ளது.

விபத்தின் போது, லொறியின் சாரதிக்கும், உதவியாளருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும், லொறிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸாரின் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)