Back to Top

மாணவர்களுக்கு கட்டாய இராணுவ சேவை 16 மாதங்களாக நீட்டிப்பு

மாணவர்களுக்கு கட்டாய இராணுவ சேவை 16 மாதங்களாக நீட்டிப்பு

July 9, 2018  07:27 am

Bookmark and Share
ஏமனுடனான போரின் போது இராணுவத்தில் பணியாற்றுவதற்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், பாடசாலை உயர் கல்வி முடித்த ஆண்கள் அனைவரும் கட்டாயமாக 12 மாதங்கள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என கடந்த 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

உயர்கல்வி முடிக்காத ஆண்கள் 2 ஆண்டுகள் இராணுவ பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேபோல், பெண்கள் விருப்பப்பட்டால், அவர்களது குடும்பத்தினர் அனுமதித்தால் இராணுவத்தில் பணியாற்றலாம் எனவும் சட்டம் அனுமதித்திருந்தது.

இந்நிலையில், கட்டாய இராணுவ பணியாற்றுவதற்கான 12 மாத காலத்தை 16 மாதங்களாக அதிகரித்து இராணுவ தலைமை அதிகாரி அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Most Viewed