Back to Top

ரி 20 இல் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார் வீரர்

ரி 20 இல் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார் வீரர்

July 9, 2018  07:34 am

Bookmark and Share
இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு ரி 20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரி 20 போட்டியில் 1949 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 51 ஓட்டங்கள் எடுத்தால் 2000 ஓட்டங்களை கடந்த 5 வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

ஆனால், முதல் போட்டியில் 32 ஓட்டங்களும், இரண்டாவது போட்டியில் 5 ஓட்டங்களுடனும் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ஓட்டங்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையே, இந்திய தலைவர் விராட் கோலி 2000 ஓட்டங்களை கடந்த 4 வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ரி 20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 14 ஓட்டங்களை எடுத்தபோது இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார்.

ரி 20 போட்டிகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரர் விராட் கோலி. இவர் 84 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே விராட் கோலி 56 போட்டிகளிலும், மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.