Back to Top

ரி 20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த வீரர்

ரி 20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த வீரர்

July 10, 2018  09:11 am

Bookmark and Share
ரி 20 கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை அவுஸ்திரேலிய ஆரம்ப வீரரும், ரி 20 போட்டிகளின் தலைவருமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்ற தொடரின் முடிவில் 891 புள்ளிகள் பெற்றிருந்தார். இதற்கிடையே ஆரோன் பின்ச், சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், சிம்பாப்வே உடனான முத்தரப்பு ரி 20 போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த முத்தரப்பு தொடரில், கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 172 ஓட்டங்களை விளாசி அசத்தினார். மேலும், இந்த தொடரில் 68,172,16,3,47 என 306 ஓட்டங்கள் குவித்து அதிரடி காட்டினார்.

இதன் காரணமாக, இன்று வெளியான ஐ.சி.சி ரி 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகள் பெற்று 4 ஆம் இடத்தில் இருந்த பின்ச் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர், பக்ரர் ஜமான் 842 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார், மூன்றாம் இடத்தில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் உள்ளார்.

ரி 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 12 ஆம் இடத்திலும், ரோகித் சர்மா 11 ஆம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Viewed