Back to Top

இலங்கையில் இரண்டாவதாக மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமமாக பனடோல

இலங்கையில் இரண்டாவதாக மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமமாக பனடோல

July 10, 2018  12:17 pm

Bookmark and Share
SmithKline Beecham (GlaxoSmithKline) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமும், நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களால் நாடப்படும் வலி நிவாரணியுமான பனடோல், Brand Finance இன் 2018 தரப்படுத்தலில் இலங்கையில் மிகவும் விருப்பப்படும் வர்த்தக நாமங்களில் இரண்டாவதாகத் திகழ்ந்துள்ளது.

2017ஆம் ஆண்டு மக்களால் மிகவும் விருப்பப்படும் வர்த்தக நாமங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்த பனடோல், கடந்த பல வருடங்களாக மக்களால் விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வருகிறது.

பாரம்பரிய மருத்துவ நாமமான பனடோல் மில்லியன் கணக்கான இலங்கையர்களில் அக்கறை கொண்டிருப்பதுடன் அவர்களுக்கு வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெரும்பாலானவர்களால் நாடப்படும் வலி நிவாரணியாகக் காணப்படுவதுடன், உடல்ரீதியான வலிகளிருந்து விடுதலைபெற்று சுமூகமான வாழ்க்கையை வாழ்வதற்கு நண்பனாக உதவிவருகிறது.

பனடோலின் இந்த அடைவு தொடர்பில் முகாமைத்துவ பணிப்பாளர் (Consumer Healthcare GSK, Sri Lanka) சுனில் மெஹ்ரா கருத்துத் தெரிவிக்கையில், ´ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையர்களின் வலி நிவாரணி என்பதுடன் உற்ற நண்பனுமான பனடோல், நாளாந்த வாழ்வில் அத்தியாவசியமானதொன்றாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே வலி நிவாரண விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி 50 வருடங்களாக சாதகமான பயணத்தை முன்னெடுக்க முடிந்துள்ளது. புத்தாக்கமான வழிகளின் ஊடாக நாம் தொடர்ந்தும் எமது நுகர்வோருடன் வினைத்திறனான தொடர்புகளைப் பேணுவோம். Brand Financeக்கும், எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்´ என்றார்.

Brand Finance என்பது வர்த்தகம் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகளை வழங்கும் உலகின் முன்னணி சுயாதீன அமைப்பாகும். இது லண்டன் நகரில் உள்ள பட்டியலிட்டப்பட்ட Brand Exchange கட்டடத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. Brand Finance தற்பொழுது உலகளாவிய ரீதியில் 20 இடங்களில் வியாபித்துள்ளது. உலகம் முழுவதிலும் சகல துறைகளிலும் உள்ள 3,500 ற்கும் அதிகமான வர்த்தக நாமங்களை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்கிறது. இந்த மதிப்பீட்டு முடிவுகள் பட்டியலிடப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படும். இலங்கையில் பெறுமதிவாய்ந்த வர்த்தக நாமங்கள் LMD இன் ஊடகச் சேவையான வருடாந்த வர்த்த நாமங்களில் வெளியிடப்படும்.

பனடோல் பன்னாட்டு சுகாதார நிறுவனமான GlaxoSmithKline நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமம் என்பதுடன், Horlicks, Sensodyne, Viva, Eno மற்றும் Iodex போன்ற வீட்டுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இலங்கையில் ஐந்து தசாப்த வரலாற்றைக் கொண்டிருக்கும் பனடோல், பல்வேறு புத்தாக்கமான பிரசாரங்களின் ஊடாக பாதுகாப்பான மற்றும் பொறுப்புவாய்ந்த மருத்துப் பாவனையை வலியுறுத்திவருகிறது. ´சிறுவர்களுக்கான பனடோல்´ என்ற Paracetamol பாணி வகையான தயாரிப்புக்கு சிறுவர்கள் திறக்க முடியாத மூடியை அறிமுகப்படுத்திய முதலாவது வர்த்தக நாமமாகவும் பனடோல் காணப்படுகிறது.

ரத்மலானையில் உள்ள பனடோல் உற்பத்தி தொழிற்சாலைக்கு 2012ஆம் ஆண்டு 217 மில்லியன் ரூபா முதலீட்டு செய்யப்பட்டதுடன், இலங்கையில் மருந்தகத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடாகவும் இது பதிவாகியுள்ளது.

உலகின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட நுகர்வோர் சுகாதார நிறுவனமான பிரித்தானியாவின் GlaxoSmithKline (GSK) plc நிறுவனத்தின் துணை நிறுவனமே SmithKline Beecham Pvt. Ltd நிறுவனமாகும். சுகாதார உற்பத்திகளின் ஊடாக மக்கள் சுகதேகிகளாக நீண்டகாலம் வாழ்வதற்கு உதவி செய்வதே GSKஇன் நோக்கமாகும். இலங்கை உட்பட 100ற்கும் அதிகமான நாடுகளில் Panadol, Sensodyne and Horlicks போன்ற வெற்றிகரமான சுகாதாரம் சார் உற்பத்திகளுக்கு GSK சொந்தக்காரராக விளங்குகிறது. Viva, Eno மற்றும் Iodex போன்ற உற்பத்திகளையும் உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது.