Back to Top

கொமர்ஷல் வங்கி இணையத்தள வங்கிச் சேவை பாவனையாளர்களுக்கு 1.8 மில்லியன் ரூபா வெல்லும் வாய்ப்பு

கொமர்ஷல் வங்கி இணையத்தள வங்கிச் சேவை பாவனையாளர்களுக்கு 1.8 மில்லியன் ரூபா வெல்லும் வாய்ப்பு

July 10, 2018  04:48 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் இணையத்தள வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 1.8 மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு காத்திருக்கின்றது. தனிப்பட்ட வங்கிச் சேவைக்காக இணைய வங்கி வழியை பயன்படுத்துகின்றவர்களுக்கு அவர்கள் தமது இணைய வங்கி பாவனையை விஸ்தரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வியக்கத்தக்க பிரசாரத் திட்டத்தின் மூலம் இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இந்தப் பிரசாரத் திட்டத்தின் கீழ் ஜுலை முதல் டிசம்பர் 2018 வரையான காலப்பகுதியில் மாதாந்தம் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

தற்போது இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்துகின்றவர்கள், புதிதாக இணைய வங்கிச் சேவையில் இணைந்து கொள்பவர்கள்ரூபவ் செயலற்ற நிலையில் இருக்கும் இணைய வங்கிச் சேவையை மீண்டும் செயற்படுத்துகின்றவர்கள் இந்தப் பிரசாரத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

மாதாந்த சீட்டிழுப்பில் இணைந்து கொள்ள தற்போதய இணைய வங்கி வாடிக்கையாளர்கள் ஐந்து செயற்பாடுகளை இணையச் சேவை மூலம் மேற்கொள்ள வேண்டும். அவற்றுள் மூன்று மாதாந்த பட்டியல் கொடுப்பனவாக இருக்க வேண்டும். புதிதாக இணையச் சேவையைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதன் மூலம் ஒரு மாதத்தில் மூன்று செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றுள் இரண்டு பட்டியல் கொடுப்பனவாக இருக்க வேண்டும்.

செயற்பாடற்ற நிலையில் இருக்கும் இணையச் சேவையை மீண்டும் செயற்படுத்துகின்ற போது அவர்களும் இரண்டு பட்டியல் கொடுப்பனவுகள் உட்பட மூன்று செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று வகைப் பாவனையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் வீதம் மூவர் மாதந்தம் தெரிவு செய்யப்படுவார். அந்த வகையில் மூன்று பேர் வீதம் டிசம்பர் 2018 வரை 18 பேர் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்படுவர்.

கொமர்ஷல் வங்கியின் இணைய வழி வங்கி மேடையானது ஒன்பது வகைப்படுத்தலின் கீழ் 68 க்கும் அதிகமான நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள வழியமைக்கின்றது. தொலைபேசி, மின்சாரம், கிரடிட் கார்ட், காப்புறுதி சந்தா, கட்டண தொலைக்காட்சி, கல்விச் சேவைகள், வரிகள் என்பன இதில் அடங்கும். வாடிக்கையாளார்கள் தமது நடைமுறை, சேமிப்பு, முதலீட்டு, கடன், கடன் அட்டை கணக்கு மீதிகளை சரிபார்த்துக் கொள்ளவும், சொந்தக் கணக்குகளுக்கு இடையில் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், கொமர்ஷல் வங்கி கணக்குள்ள பதிவு செய்யப்பட்ட மூன்றாம் தரப்புடன் நாள் முழுவதும் உடனடி பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும்.

மேலதிகமாக கொமர்ஷல் வங்கியின் இணைய வழி வாடிக்கையாளர்கள் நிலையான வைப்புக்கள், தனியார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கும் இதன் ஊடாக விண்ணப்பிக்கலாம். திறைசேரி முறிகள் மீதான முதலீடுகள், பங்குச் சந்தைக் கொடுப்பனவுகள் என்பனவற்றையும் இந்த மிகவும் பாதுகாப்பான அதி நவீன மற்றும் பாவனைக்கு இலகுவான இணைய வழி சேவை ஊடாக வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும்.

கொமர்ஷல் வங்கி தொடர்ச்சியாக குறுந்தகவல் அழைப்புக்கள், நினைவூட்டல் தொலைபேசி அழைப்புக்கள், பட்டியல் போனஸ் பிரசார வெகுமதிகள், பாவனையாளர் செயற்படுத்தல் பிரசாரங்கள், கிளைகளில் நேருக்கு நேர் பிரசாரங்கள், இலவச இணைய வழி வங்கிச் சேவை வாய்ப்புக்கள் என பல வழிகளில் இது தொடர்பான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 261 கிளைகளுடனும், 775 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது இலங்கையின் தலைசிறந்த வங்கி, மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும்ரூபவ் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2016ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.