Back to Top

விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் குண்டு கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் குண்டு கண்டுபிடிப்பு

July 11, 2018  11:36 am

Bookmark and Share
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றது.

அண்மையில் விமானப்படையினை சேர்ந்த மூன்று பேர் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது இவர்களை கைது செய்த பொலிஸார் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி இருந்தனர்.

குறித்த பகுதி நீதிமன்ற அனுமதியுடன் நேற்று முன்தினம் தோண்டப்பட்ட போது விடுதலைப் புலிகளின் சீருடை ஒன்றும் தமிழன் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவில் இதுவரை நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணி இடம்பெறும் போது அந்த பகுதிகளில் முன்னதாகவே சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெற்று இருப்பதும், தோண்டும் போது எதுவும் கிடைக்கப்பெறாமல் தோல்வியடைவதும் வழமையாகிறது.

எனவே இங்கு புதைக்கப்படுகின்ற பொருட்களை ஏற்கனவே எடுத்துவிட்டு அந்த இடம் தோண்டுவதை சட்ட பூர்வமாக்க நீதிமன்றின் அனுமதியுடன் தோண்டப்படுகிறதா என்று தெரிவிக்கப்படுகிறது

அத்தோடு இவ்வாறு விடுதலைப்புலிகளின் ஆயுதம் தேடி சட்டவிரோத தோண்டும் பணியில் விமானப்படையினை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இரு நாட்களில் ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், சீருடை, கொடியுடன் பலர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)