Back to Top

இலங்கை சந்தைக்கு புதிய Peugeot 5008 அறிமுகம்

இலங்கை சந்தைக்கு புதிய Peugeot 5008 அறிமுகம்

July 11, 2018  11:53 am

Bookmark and Share
Peugeot இன் பல விருதுகள் பெற்றதும் உலகளாவிய ரீதியில் வாகன ஆர்வலர்களினால் “Space Wagon” என அழைக்கப்படுகின்றதுமான SUV சமீபத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரஞ்சு உற்பத்தியாளர்களின் சிறந்த விற்பனை வாகனமான இந்த 7 இருக்கை வாகனமானது, இலங்கையில் Peugeot ற்கான பிரத்தியேக விற்பனையாளரான Carmart Limited இனாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அறிமுகப்படுத்தலானது இல 424, யூனியன் பிளேஸ், கொழும்பு 4 எனும் முகவரியில் அமைந்துள்ள ஊயசஅயசவ இன் விசாலமான காட்சியறையிலேயே நடைபெற்றது.

கடந்த தசாப்தங்களிலே இந்த SUV ஆனது அதன் உட்புற நேர்த்தியானது கரடுமுரடான வெளிப்புற கட்டமைப்புடன் இணைந்து காணப்படுவதனாலேயே பல கார் உரிமையாளர்களின் விருப்பத்தேர்வாக இந்த SUV புகழ்பெற்றுள்ளது. இலங்கையின் மாறுபடும் காலநிலை மற்றும் வெவ்வேறுபட்ட வீதி நிலைமைகளிற்கு மிகப்பொருத்தமானதாக SUV காணப்படுகின்றது.

Peugeot இன் பிரான்ஸ் தேசத்தில் அமைந்துள்ள ஸ்டேட் - ஒஃப் - த -ஆ ர்ட் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஐரோப்பிய வாகனமானது 2018ம் ஆண்டில் What Car – Best Large SUV போன்ற பல சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய இராஜ்ஜியத்தில் நீண்ட நாட்களாக நடாத்தப்படும் மாதாந்த ஆட்டோமொபைல் சஞ்சிகை மற்றும் இணையத்தளமான “What Car?” கார் சந்தையின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள சிறந்த கார்களை தெரிவு செய்வது மாத்திரமன்றி ஒவ்வொரு வருடத்தினதும் தை மாதத்தின் போது ´வருடத்திற்கான கார்´ எனும் சிறந்த காரை தேர்ந்தெடுக்கின்றது.

இந்த வாகனத்தின் அப்பழுக்கற்ற நவீன வடிவமைப்பு மற்றும் நடைமுறை அம்சங்களானது இந்த வாகனத்தை ஒரு பெரிய குடும்பத்திற்கு ஏற்ற வாகனமாக மாற்றும் அதேவேளையில் தனது மென்மைத்தன்மையை தக்க வைத்துக்கொள்தல் என்பனவே இவ்வாகனமானது இவ்விருதை பெற்றுக்கொள்ள வழிவகுத்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சிறப்பியல்புகளாகும். இந்த வாகனமானது ‘i-Cockpit’ எனப்படும் உட்புற அமைப்பைக்கொண்டுள்ளதுடன் இடவசதிகளிற்கான புதிய தலைமுறைகளின் கோரிக்கைகளை இந்த SUV சிறந்த முறையில் பூர்த்தி செய்கின்றது. இவ்வாகனம் சாதாரணமாக ஏழு இருக்கைகளைக் கொண்டுள்ளதுடன் முதல் இரண்டு வரிகைளிலும் தாராளமான அளவில் பெரியவர்களிற்கான இடவசதி காணப்படும் அதேவேளையில் மூன்றாவது வரிகை இருக்கைகள் சிறுவர்களிற்கு மிகப்பொருத்தமானதாக காணப்படுகின்றது.

இந்த இருக்கைகள் மடிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 5008 ஆனது நீண்ட நாள் பயணங்களிற்கு தேவையான களஞ்சியப்படுத்தலிற்கு பொருத்தமான இடவசதியை கொண்டுள்ளது.

1.2 லீட்டர் பெற்றோல் எஞ்சினைக் கொண்டுள்ளமையானது இன்னுமொரு இதனது விஷேட காரணியாக காணப்படுவதுடன் இலங்கையில் வாகனங்களிற்கு காணப்படும் வரி அடைப்புகளிற்கு மத்தியிலும் இந்த வாகனமானது மிகவும் கவர்ச்சிகரமான நம்ப முடியாத அறிமுகப்படுத்தல் விலையான 9.9 மில்லியனிற்கு பெறக்கூடியதாக காணப்படுகின்றது. துல்லியமான கையாளுதல், எளிதான கட்டுப்பாட்டு இயக்கி, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்ஸஸ், வாகன இயக்குதல் (மற்றும் பார்க்கிங்) என்பவற்றை மிக எளிதாக்கும் ரியர் - வியு கமெரா என்பனவும் இதனுள் உள்ளடங்குகின்றன.

i-Cockpit இல் காணப்படும் பல இயந்திர நுணுக்கப் பகுதிளானவை தனித்துவமானவைகளாக காணப்படுகின்றமை இதன் இன்னுமொரு சிறப்பம்சமாகும். இதனது ஸ்டியரிங் வீல், 8´ டச் ஸ்கிரீன் டாஸ்போஃர்ட், 12.3´ ஹை ரெசல்யூஷன் டிஜிடல் ஹெட் - அப் டிஸ்ப்ளே என்பன உள்ளடங்கலான இந்த i-Cockpit ஆனது அதனது சிறந்த கிராபிக்ஸ் மற்றும் நேர்த்தியான அனிமேஷன்ஸ் என்பனவற்றின் மூலம் வாகன சாரதிகளை மிகவும் கவர்ந்திழுக்கின்றது.

இந்த PEUGEOT 5008 ஆனது சாதாரண SUV யை விட சிறந்ததாக காணப்படுகின்றது. மூன்று பொருத்தல்கள், தனிப்பட்ட, இரண்டாவது வரிசையில் மடிக்கக்கூடிய இருக்கைகள், நீளத்தில் சரிசெய்யக்கூடிய, அகற்றக்கூடிய, மூன்றாவது வரிகையில் மடிக்கக்கூடிய இருக்கைகள் மற்றும் மடிக்கக்கூடிய முன் இருக்கை (3.20m வரையிலான நீண்ட பாரத்தை தாங்கக்கூடிய) எனும் புதுமையான அம்சங்களுடன் இவ்வாகனமானது பிற வாகனங்களிலிருந்து தனித்து காணப்படுகின்றது.

இந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றைய வாகனங்களில் காணப்படாத பல அம்சங்களை Peugeot 5008 வழங்குகின்றது. 12 வருட கால துளை எதிர்ப்பு உத்தரவாதம் மற்றும் 4 வருட திட்டமிட்ட பராமரிப்பு காலண்டர் என்பனவற்றை உங்களிற்கு முற்றிலும் இலவசமாக வழங்குவதன் மூலம் இந்தச் சலுகையை மேலும் Carmart களிப்பூட்டுகின்றது.

Most Viewed