
19 மில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளுடன் இந்தியர் கைது
July 11, 2018 12:42 pm
ஒரு தொகை தங்க நகைகளை, வாகனங்களை உயர்த்தும் கருவியில் (Hydraulic Vehicle Jack) மறைத்து இலங்கைக்கு எடுத்து வந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.
இன்று (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின், கேரளா பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 1 கோடியே 90 இலட்சத்து 82 இரண்டாயிரத்து 630 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் டுபாயில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 232 என்ற விமானத்திலேயே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் பின்னர் பயணிகள் வெளியேறும் பாதையூடாக செல்லும் போது அவருடைய பயணப்பையினுள் இருந்த வாகனங்களை உயர்த்தும் கருவியில் இருந்து குறித்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 கிலோ 13 கிராம் நிறையுடைய தங்க நகைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.