Back to Top

மகரகம நகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு எதிரான மனு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு

மகரகம நகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு எதிரான மனு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு

July 11, 2018  03:14 pm

Bookmark and Share
மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மகரகம நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும் அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி மகரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்களின் உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுவை எதிர்வரும் 30ம் திகதிக்கு பிற்போட்ட நீதிபதி அன்றைய தினம் எதிர்ப்புக்களை தெரிவிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed