Back to Top

பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையும் அதற்கு உடந்தையாக இருந்த தாயும்

பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையும் அதற்கு உடந்தையாக இருந்த தாயும்

July 11, 2018  03:50 pm

Bookmark and Share
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாயை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.

வெல்லாவெளி, கணேசபுரம் பிரதேசத்தில் கடந்த ஏப்பிரல் மாதம் 15 ஆம் திகதி 11 வயதுடைய தனது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தாயாருக்கும் தெரிந்திருந்தும் தாயார் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்காது கணவரை பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி வேறு கிராமத்தில் உள்ள தனது சகோதரியிடம் தனக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறிப்பிட்ட சகோதரி இது தொடர்பில் சிறுமியின் வீட்டுக்கு பக்கத்திலுள்ள உள்ள வீட்டிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பக்கத்து வீட்டார் பொலில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று (10) பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 43 வயதுடைய தந்தையாரையும், அதற்கு உடந்தையாக இருந்த தாயாரையும் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வியக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

(அம்பாறை நிருபர் சரவணன்)



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed