Back to Top

கிறிஸ்ப்றோ நிறுவனம் - கோழி கழிவுகளை பயன்படுத்தி விறகுக்கு பதிலாக மாற்று எரிபொருள் உற்பத்தி

கிறிஸ்ப்றோ நிறுவனம் - கோழி கழிவுகளை பயன்படுத்தி விறகுக்கு பதிலாக மாற்று எரிபொருள் உற்பத்தி

July 12, 2018  08:06 am

Bookmark and Share
இலங்கை கோழி உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான கிறிஸ்ப்றோ குழுமம், உயர்த்தரம், சுகாதாரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்துகின்றது. அதற்கமைய கிறிஸ்ப்றோ குழுமத்தின் அனைத்து உற்பத்தி செயற்பாடுகளும் முழுமையாக சுற்றாடலுக்கு சார்பான வகையில் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கமைய புதிய நடவடிக்கையாக கோழி கழிவுகளை பயன்படுத்தி விறகுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்று எரிபொருள் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோழி கழிவுகளை பயன்படுத்தி மாற்று எரிபொருளாக (Chicken Briquettes) இலங்கையின் முதற் தடவையாக உற்பத்தி செய்யும் சந்தர்ப்பம் இதுவே. இச் செயற்திட்டத்தை அடுத்தாண்டு ஆரம்பத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்கமுவ பிரதேசத்தில் அத்திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்ப்றோ குழுமத்திற்கு சொந்தமான போர்ச்சூன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (தனியார்) நிறுவன பொறியிலாளர் லலித் பண்டார தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கோழி உற்பத்தி துறையை சுற்றாடலுக்கு தீங்கிழைக்காத வகையில் நடத்திச் செல்ல இரண்டு பிரதான சவால்களை எதிர்கொண்டோம். கோழியின் தேவையற்ற பாகங்களை அப்புறப்படுத்தல் (Unwanted chicken parts) மற்றும் கோழி கழிவுகள் (Chicken litter) உரிய முறையில் அப்புறப்படுத்தலே அவையாகும். அதற்கமைய தற்போது கிறிஸ்ப்றோ உற்பத்திகளில் கோழியின் தேவையற்ற பாகங்கள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு கோழி உணவாக பயன்படுத்தப்படுகின்றது. கோழி கூடுகளில் காணப்படும் கழிவுகள் தற்போது புதைக்கப்பட்டு வருகின்றன. புதிய செயற்திட்டம் ஆரம்பமான பின்னர் கோழி கழிவுகள் முழுமையான மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு கோழி உணவு உற்பத்திக்கு தேவையான எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். அதற்கமைய தற்போது கோழி உணவு உற்பத்தி செய்யும் போர்ச்சூன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (தனியார்) நிறுவனத்தின் பொய்லருக்கு பயன்படுத்தப்படும் விறகு கொல்லிகள் முற்றாக நிறுத்தப்படும் என்றார்.

போர்ச்சூன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (தனியார்) நிறுவனம் கோழி உணவு உற்பத்தி செய்வதற்காக பொய்லருக்கு விறகுகளையே தற்போது பயன்படுத்தி வருகிறது. கிறிஸ்ப்றோ கோழி பண்ணையிலிருந்து கோழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் இந்த செயற்திட்டம் முதன் முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு சமமான செயற்திட்டமொன்று இந்தியாவில் நடைபெறுவதாக குறிப்பிட்ட லலித் பண்டார, சாணம் பயன்படுத்தப்பட்டு எரிபொருள் உற்பத்தி செய்யப்படும் அந்த செயற்திட்டத்தை கண்காணித்த பின்னரே கோழி கழிவுகளை பயன்படுத்தி விறகுக்கு பதிலாக மாற்று எரிசக்தியை பயன்படுத்த தீர்மானித்தாக கூறினார். அதற்கமைய ஒட்டுமொத்த கோழி உற்பத்தி துறைக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற கோழி கழிவுகளை அற்புறப்படுத்துவதற்கு வெற்றிகரமானதும் சூழலுக்கு தீங்கிழைக்காததுமான தீர்வை கிறிஸ்ப்றோ நிறுவனம் இலங்கைக்கு முதற்தடவையாக அறிமுகப்படுத்திய நற்பெயர் இதன் ஊடாக கிடைக்கின்றது.

இதேவேளை அண்மையில் கொண்டாடப்பட்ட சர்வதேச சுற்றாடல் தினத்திற்கு அமைவாக கிறிஸ்ப்றோ குழுமத்திற்கு சொந்தமான 11 இடங்களில் மரங்களை நடும் செயற்திட்டம் இடம்பெற்றது. சூழலுக்கு தீங்கிழைக்காத உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ´ஹரித்த சத்காரய´ செயற்திட்டத்துக்கு அமையவே மர நடுகை இடம்பெற்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த குழும மனிதவள மற்றும் போர்ச்சூன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (தனியார்) நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன மஹிந்தசிறி கருத்து தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற விருது விழாவில் சிறந்த ஊழியர்களுக்கான விருதை வென்றவர்கள் கைகளினாலேயே தமது வேலை ஸ்தானத்தில் மர நடுகைகள் இடம்பெற்றன அதற்கமைய 11 மஹாகிநி மரக்கன்றுகளும் 25 மாமரக் கன்றுகளும் நடப்பட்டன என கூறினார்.

இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்ப்றோ பசுமை விருதை ஒவ்வொரு வருடமும் சுற்றாடலுக்கு தீங்கிழைக்காத கிறிஸ்ப்றோ கோழி பண்ணை ஒன்றுக்கு வழங்கப்படும் என கூறினார்.

ISO 14001 சுற்றாடல் பாதுகாப்பு கட்டமைப்புக்கான சான்றிதழை பெற்ற இலங்கையின் ஒரே கோழி உற்பத்தி நிறுவனமான கிறிஸ்ப்றோ, உயர்தரமான மற்றும் சுகாதாரமான முறையில் தமது உற்பத்திகளை அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்கின்றன.

1972 ஆம் ஆண்டு 100 கோழி குஞ்சுகளுடன் ஆரம்பமான கிறிஸ்ப்றோ அன்று முதலே சந்தையில் முன்னணியாக செயற்படுகின்றது. தரம், புத்துணர்வு மற்றும் நவீனமயத்துக்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து இலங்கையின் முன்னணி கோழி உற்பத்தி வர்த்தக நாமமாக முன்னேறியது. தாய் பண்ணை, குஞ்சு பொரிப்பக பண்ணை, புரொய்லர் பண்ணை மற்றும் கோழி உணவு உற்பத்தி மண்டபம் உட்பட படர்ந்து விரிந்த இடத்தை கிறிஸ்ப்றோ கொண்டுள்ளது. ´பண்ணையிலிருந்து கரண்டி வரை´ (Farm to Fork) என்ற எண்ணமே நிறுவனத்தின் தாரக மந்திரமாகும். கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் வெற்றிக்கு வெளி கோழி உற்பத்தியளார்கள், சோளம் உற்பத்தியாளர்கள் போன்று இலங்கை வாடிக்கையாளர்களும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.