Back to Top

சட்டம், ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் மா அதிபருடன் யாழிற்கு விஜயம்

சட்டம், ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் மா அதிபருடன் யாழிற்கு விஜயம்

July 12, 2018  12:06 pm

Bookmark and Share
சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (12) யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலிற்காக பொலிஸ் நிலையம் வருகை தந்த அமைச்சருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையிலையே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் விஜயம் செய்திருக்கின்றனர்.

இந்த விஜயத்தின் போது யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து யாழிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இரகசிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)