Back to Top

இன்று இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்

இன்று இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்

July 12, 2018  12:49 pm

Bookmark and Share
தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர், இலங்கைக்கும்- தாய்லாந்திற்குமிடையிலான கலாச்சாரம் முதல் வணிகம் வரையானதும், மக்கள் - மக்களுக்கிடையிலான தொடர்பு சார்ந்த முழுமையான இருதரப்பு ஈடுபாடுகள் குறித்த இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 நவம்பர் மாதத்தில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னணியாக இந்த விஜயம் அமையவுள்ளது.