Back to Top

திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

July 12, 2018  04:36 pm

Bookmark and Share
திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை தொடர்பான திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் எதிர்வரும் 25ம் திகதி வரை இந்த தடை உத்தரவு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமம் பெற்றிருந்த 04 தனியார் நிறுவனங்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது என்றும் அனைத்து திரைப்படங்களும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் திரைப்பட கூட்டுத்தாபனம் தீர்மானித்ததற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed