Back to Top

இலங்கை - சிங்கப்பூர் உடன்படிக்கை நகலின் சிங்களப் பிரதி பாராளுமன்றத்திற்கு

இலங்கை - சிங்கப்பூர் உடன்படிக்கை நகலின் சிங்களப் பிரதி பாராளுமன்றத்திற்கு

July 12, 2018  06:22 pm

Bookmark and Share
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நகலின் சிங்களப் பிரதி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் ஆங்கிலப் பிரதி ஆயிரத்து 200 பக்கங்களை தாண்டியுள்ளது. இதன் காரணமாக சிங்களப் பிரதி அதைவிட கூடுதலான பக்கங்களை கொண்டிருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக சர்வதேச வணிக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சு அறிவித்துள்ளது.

உடன்படிக்கையின் உள்ளடக்கம் பற்றிய சரியான தகவல்கள் முறையாக தொடர்பாடப்படாததால், மொழிப் பிரச்சினை ஏற்பட்டதென கூறப்படுகிறது.

இதன் காரணமாக விரைவில் சிங்களப் பிரதியை வழங்குவது பற்றி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்