Back to Top

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 5.5 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 5.5 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

July 12, 2018  08:40 pm

Bookmark and Share
இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து சென்னை, கோயம்பத்தூர், தூத்துக்குடியை சேர்ந்த மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை - பூதக்குடி, சுங்கச்சாவடி அருகே சென்ற தனியார் பேரூந்தில் இருந்தே இன்று இவ்வாறு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்தை நிறுத்தி சோதனையிட்ட போது புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரத்தை சேர்ந்த இருவர் கடத்தி சென்ற 17.83 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் 16 கிலோ சுத்த தங்கம் எனவும் 1.83 கிலோ உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக சென்னை, மண்ணடியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மன்னார் நிருபர் லெம்பட்)

Most Viewed