Back to Top

அதிநவீன பிசின் உற்பத்தி தொழிற்சாலையை பொல்கஹவலையில் திறந்துள்ள Pidilite நிறுவனம்

அதிநவீன பிசின் உற்பத்தி தொழிற்சாலையை பொல்கஹவலையில் திறந்துள்ள Pidilite நிறுவனம்

July 13, 2018  07:45 am

Bookmark and Share
Pidilite லங்கா (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் அதிநவீன உற்பத்திச் சாலை ஒன்று வடமேல் மாகாணத்தில் உள்ள பொல்கஹவலையில் ஜுலை மாதம் பத்தாம் திகதி செவ்வாய்க்கிழமை சம்பிராயப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் அதிமேதகு தரன்ஜித் சிங் சந்து (இலங்கையில் உள்ள இந்தியஉயர் ஸ்தானிகர்) பரத் பூரி (Pidilite இன்டஸ்ட்ரீஸ் முகாமைததுவப் பணிப்பாளர்) றொஹான் டி சில்வா (மெக்லறன்ஸ் குழுமத்தின் தலைவர்) ஆகியோர் உற்பட சிறப்பு அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் புதிய உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படுவது பற்றி கருத்து வெளியிட்ட பரத் பூரி ´Pidilite இன் வியக்கத்தக்க இலங்கை விஜயம் 11 வருடங்களுக்கு முன் தொடங்கியது. இலங்கை சந்தையில் எமது அர்ப்பணத்துக்கான ஒரு சான்றாக இந்த முதலீடு அமைந்துள்ளது. நான்கு ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த இடத்தில் முதற் கட்டமாக பிசின்கள் உற்பத்தி செய்யப்படும். Fevicol® என்ற பிரபலமான வியாபாரக் குறியீட்டின் கீழ் இது உற்பத்தி செய்யப்படும். இதைத் தொடர்ந்து கைத்தொழில் பிரிவில் இது மேம்படுத்தப்படும்´ என்று கூறினார்.

Pidilite லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. ரமணி பொன்னம்பலம் இது பற்றி மேலும் கூறுகையில் இந்தப் பிரிவின் இறக்குமதிக்கு இது கணிசமாக மாற்றீட்டுப் பங்களிப்பை வழங்குவதோடு இந்தப் பிராந்தியத்தில் வேலை வாய்ப்பையும் இது அதிகரிக்கும் என்று கூறினார்.

இலங்கையில் அதி உயர்தரம் மிக்க பிசினான Fevicol, Dr. FIXIT மற்றும் ஆரோக்கியமான வீடுகளுக்கான நீர் தடுப்பு தீர்வு என்பன இலங்கையில் Pidilite இன் பிரபலஉற்பத்திகளாக இருக்கின்றன. 2015ல் Pidilite லங்கா நிறுவனம் பலகைத் தொழில் துறை காகிதாரிகள் மற்றும் கைத்தொழில் துறையில் மிகவும் பிரபலமான வெள்ளைப் பிசின் வகையான இலங்கை உற்பத்தியான Chemifix ஐ பொறுப்பேற்றது. இலங்கையில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மேலும் செயற்திறன் மிக்க நிறுவனமாகத் திகழ வேண்டும் என்ற இந்த நிறுவனத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

Pidilite லங்கா (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் பற்றி

ஆசியாவின் முன்னணிபிசின் மற்றும் நிர்மாணத்துறை இரசாயனம் என்பனவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனமான Pidilite இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் மெக்பேர்டன் ஹோல்டிங்ஸ் (மெக்பேர்டன் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம், மெக்லாறன்ஸ் ஹோல்டிங்ஸ் வரையறுக்கப்பட்ட நிறுவனம், அலயன்ஸ் பினான்ஸ் கம்பனி வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்பனவற்றுக்கு இடையிலான மூலோபாய கூட்டு) என்பனவற்றின் கூட்டு முயற்சியாக 2015 இல் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமே Pidilite லங்கா (தனியார்) வரையறுக்கப்பட்டநிறுவனமாகும். 2007 முதல் மெக்பேர்டன் இலங்கையில் Pidilite இன் பிரத்தியேக விநியோகஸ்தராக செயற்பட்டு வந்தது. 2015 இல் Pidilite லங்கா நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் வரை இது நீடித்தது.