
முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
July 13, 2018 08:53 am
முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் ஒரு கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (13) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை கூலி வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக, அமைப்பின் தலைவர் சரித் அதத்தனபொல தெரிவித்துள்ளார்.