Back to Top

TNPL 2018 - இன்றைய போட்டி விபரம்

TNPL 2018 - இன்றைய போட்டி விபரம்

July 13, 2018  10:21 am

Bookmark and Share
3 வது TNPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

தொடக்க லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2 வது லீக் ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சந்திக்கிறது.

இந்த ஆட்டம் நெல்லையில் நடைபெறுகிறது.