Back to Top

ஹெரோய்ன் பொதி செய்த ஒரே குடும்பத்தின் ஐந்து பேர் கைது

ஹெரோய்ன் பொதி செய்த ஒரே குடும்பத்தின் ஐந்து பேர் கைது

July 14, 2018  10:12 am

Bookmark and Share
ஹெரோய்ன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, மகரகம, வீர மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விற்பனைக்காக ஹெரோய்ன் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 57 வயதுடைய தந்தை, 45 வயதுடைய தாய், 17 மற்றும் 27 வயதுடைய இரண்டு மகள் உட்பட மற்றொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் வாடகை வீடொன்றிலேயே இவர்கள் இந்த வேலையை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Most Viewed