Back to Top

இலங்கை அணி 190 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது

இலங்கை அணி 190 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது

July 14, 2018  11:55 am

Bookmark and Share
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 190 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

முன்னதாக போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி இலங்கை அணி 161 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சற்று முன்னர் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Most Viewed