Back to Top

குழந்தையை விற்க முயன்ற பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

குழந்தையை விற்க முயன்ற பெண்கள் உட்பட நான்கு பேர் கைது

July 14, 2018  01:46 pm

Bookmark and Share
பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்க முயன்ற மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் றாகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பிறந்து 15 நாட்களுடைய அந்த குழந்தையை 02 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாய், பாட்டி, தாத்தா மற்றும் தரகர் பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் றாகம மற்றும் மஸ்கெலிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

றாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.