Back to Top

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

July 14, 2018  02:53 pm

Bookmark and Share
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி இலங்கை அணி 161 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 190 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது..

இரண்டாவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக தில்ருவன் பெரேரா 6 விக்கட்டுக்களையும், ஹேரத் 03 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.