Back to Top

கிரிக்கெட் அணியில் இருந்து இருவர் நீக்கம்

கிரிக்கெட் அணியில் இருந்து இருவர் நீக்கம்

August 6, 2018  07:42 am

Bookmark and Share
இந்தியாவுக்கு எதிராக எதிர்வரும் 9 ஆம் திகதி லண்டன் லோர்ட்சில் தொடங்கும் 2 வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

முதலாவது டெஸ்டில் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய டேவிட் மலான் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மதுபான விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணையை சகல துறை ஆட்டக்காரர் பென்ஸ்டோக்ஸ் இந்த வாரம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர்களுக்கு பதிலாக புதுமுக துடுப்பாட்ட வீரர் 20 வயதான ஆலி போப் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு: அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (தலைவர்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், சாம் குர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாமி போர்ட்டர்.

Most Viewed